விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வளத்தி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் துாய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் துாய்மைக் காவலர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று (செப் 28) நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார்.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் மஸ்தான் முகாமைத் துவக்கி வைத்து பேசினார். பி. டி. ஓ. , க்கள் சிவசண்முகம், சையத் முகமத், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பரையந்தாங்கல் ஊராட்சி தலைவர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
துாய்மைக் காவலர்கள், பணியாளர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதே போன்று, மேல்மலையனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.