விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், களத்தம்பட்டு ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் "சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை" முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ துவக்கி வைத்தார். மேலும் கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். உடன் கால்நடை துறை உதவி இயக்குனர், ஒன்றிய பெருந்தலைவர், துணை பெருந்தலைவர், ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.