செஞ்சியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணி

63பார்த்தது
செஞ்சியில் புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 33 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படு கிறது. இதில் புதிதாக குழாய் அமைப்பது, குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நடை பெற்றது. இதற்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ் தான் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, புதிய குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, முல்லை, செஞ்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ் சேரி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், துணைத் தலைவர் ராஜலஷ்மி, செயல் மணி, முன்னாள் துணைத் தலைவர் சங்கர், பேரூராட்சி, ஒன்றிய கவுன்சிலர்கள், தி. மு. க. நிர்வாகிகள் உள்பட பலர்கலந்து கொண்டனர். தொடர்ந்து அனந்தபுரம் பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 53 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி