பக்ரீத் ஈகை திருநாள் இஸ்லாமியர்கள் தொழுகை

69பார்த்தது
திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகை, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் ஈதுல் அதா தொழுகையை திண்டிவனம், மயிலம் ரோடு பகுதியில் அமைந்துள்ள வக்ஃப் வாரிய குபா ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர்.

பள்ளி வாசல் பேஷ் இமாம் நியாஸ் அகமது தலைமையில் நடந்த சிறப்புத்தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திண்டிவனத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மசூதியில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வக்பு இடத்திற்கு வந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதில், அனைத்து மசூதி முத்தவல்லிகள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தொழுகை முடிந்த பிறகு முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகள் அறுத்து பலியிடப்பட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கு ஏழை எளியோர்க்கும், ஒரு பங்கு உறவினருக்கும்,
ஒரு பங்கு ரத்த சொந்த பந்தத்திற்கும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி