மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா

69பார்த்தது
திண்டிவனம் அடுத்த மயிலம் மலைமேல் அமைந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக பொடி, பஞ்சாமிர்தம், பால், சந்தனம், தேன், திருநீரு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதேபோல் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், பழங்கள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

மூலவர் தங்க கவசத்திலும்,
இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுப்பிரமணிய சுவாமி பச்சை பட்டு உடுத்தி வள்ளி தெய்வானை சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உற்சவ மூர்த்திக்கு பல்வேறு விதமான தீபாராதனைகளும், சோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பிரகாரம் வலம் வந்ததை தொடர்ந்து கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

கிருத்திகை விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி