முக்தார் அன்சாரி கேங்ஸ்டர் கும்பலின் முக்கிய புள்ளியாக இருந்த அனுஜ் கண்ணுஜியா (50), உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படை, ஜார்கண்ட் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் போது நேற்று (மார்ச் 29) என்கவுண்டரில் கொல்லப்பட்டார். கொலை, பணம் பறித்தல், ஆயுதக்கடத்தல் உள்ளிட்ட 23 வழக்குகளில் தேடப்பட்டு வந்த அனுஜ் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ரகசிய தகவலில்படி போலீசார் அனுஜை பிடிக்க சென்றபோது, அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அனுஜ் உயிரிழந்தார்.