மே 1ஆம் தேதி முதல் ATM மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும் என RBI அறிவித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளால் பலனடையும் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ATM-களில் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும்.