விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம்!

52பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், வரும் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆளும் திமுக, அன்னியூர் சிவா-வை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. கே.வி. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம். கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பணிக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி