தஞ்சை: தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி, அவரது ரசிகர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'ஹெல்மெட் அணிந்து சென்றால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்' என ரசிகர் ஒருவர் விஜயகாந்த் வேடமணிந்து அறிவித்ததால் பெட்ரோல் பங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.