விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டி..?

27673பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டி..?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த நா.புகழேந்தி சமீபத்தில் காலமானதால், அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த விஜய், இடைத்தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமே இந்த ஏற்பாடு என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என ஐந்து முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி