வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான
ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுப்பணி நிலைத் திறனில் உள்ள குளறுபடிகளை உடனடியாக தீர்க்க வேண்டும்; பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.