மகளிர் பிரீமியர் லீக் (WPL) டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு வடோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ பெங்களூரு - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.