வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜா தியேட்டர் வரை 1. கிமீ தூரத்திற்கு சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதையை ஆக்கிரமித்தும் 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகளை பறிமுதல் செய்தனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைக்கக்கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சாலையோர வியாபாரிகளை எச்சரிக்கை சென்றனர்.