லாரி ட்யூப்களில் பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராயம் அழிப்பு

64பார்த்தது
வேலூர் மாவட்டம்

பேரணாம்பட்டு அருகே வீட்டில் லாரி ட்யூப்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு - இரண்டு பேர் மீது வழக்கு பதிவு - மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் வீட்டில் லாரி ட்யூப் களில் கள்ள சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக குடியாத்தம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பெயரில் விரைந்து சென்ற குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் கோட்டைச்சேரி பகுதியில் சேட்டையன் என்பவர் வீட்டில் லாரி ட்யூபுகளில் பதுக்கி வைத்திருந்த கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தனர் மேலும்

அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் வீட்டிலும் லாரி ட்யூப் களில் பதுக்கி வைத்திருந்த கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 200 லிட்டர் கள்ள சாராயத்தை கீழே கொட்டி தீட்டு அழித்தனர்.

மேலும் சரண்ராஜ் மற்றும் சேட்டையன் இவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தொடர்ந்து பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள கோட்டைச்சேரி, கள்ளிச்சேரி பகுதிகளில் உள்ள மலைகளில் கள்ள சாராயம் காய்ச்சி லாரி ட்யூபுகள் மூலம் பேரணாம்பட்டு, குடியாத்தம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி