தமிழ்நாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த ஜூலை மாதம் வரையிலான 7 மாத காலத்தில் சாலை விபத்துகளில் 10,536 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2023-ல் சாலை விபத்துகளில் 11,106 பேர் பலியாகி இருப்பதாகவும், ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 570 குறைந்திருப்பதாகவும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் 5% குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.