தோல் உரிக்காத பாம்பு வகைகள் உலகில் இல்லை என்றும் அனைத்து பாம்புகளும் தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாம்பானது தன் உடலில் புதிய தோல் உருவாகியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளும் போது, உடனே பழைய தோலை உரித்து கொள்ள முயலும். புதிய தோல் அதன் கண்களுக்கு அருகில் உருவாகும் காரணத்தால் பாம்பினால் சரியாக பார்க்க இயலாது. இதனால்தான் பழைய தோலை அகற்ற பாம்பு நினைக்கும்.