காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். காலை உணவுத்திட்டம் குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், "காலை உணவுத்திட்டம் குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்வதையும், கடுமையான நோய்களையும் கணிசமாகக் குறைத்துள்ளது. நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.