நாமக்கல் மோகனூரை சேர்ந்தவர் செல்வமணி(47). இவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். படிவழிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற செல்வமணி ரூ.10 தரிசன கட்டணம் வாங்கி வரிசையில் காத்திருந்தார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு திருக்கோயில் மருத்துவமனையில் முதலுதவி அளித்தபின் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்வமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.