தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னை, கிண்டியில் போலீசார் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை இன்று துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஆதம்பாக்கத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்யும் திட்டத்தோடு வந்த கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் மகாராஜா இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.