தொகுதி மறுவரையறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய 'டி-ஷர்ட்' அணிந்து கொண்டு அவைக்கு வந்த திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது குறித்து மாநிலங்களவை செயலகம் இன்று (மார்ச் 21) முடிவெடுக்க உள்ளது. மாநிலங்களவை அவை குறிப்பில் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, சண்முகம், வில்சன், கிரிராஜன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு உள்ளிட்ட 10 எம்பிக்கள் நாடாளுமன்ற விதிகளுக்கு எதிராக டி-ஷர்ட் அணிந்து வந்து அவை மரபை மீறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.