உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2022 சட்டசபை தேர்தலின் போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தல் வெற்றி பின்னர் யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின், 2024 மார்ச் 12-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று (ஜன. 27) முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளதாக, அம்மாநில முதல்வர் தாமி நேற்று (ஜன. 26) அறிவித்தார்.