கோவை மருதமலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, "மருதமலையில் 160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து விரைவில் வல்லுநர் குழு ஆய்வு செய்யவுள்ளனர். இந்த சிலை, ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.