டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளாக நடைபெறும் இந்த செஸ் தொடரில், நேற்று (ஜன.26) நடைபெற்ற 7-வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ் – பிரக்ஞானந்தா மோதிக்கொண்டனர். விறுவிறுப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் 33வது காய் நகர்த்தலுக்குப் பிறகு விளையாட்டு டிராவில் முடிந்தது. இதனால் இருவருக்கும் 0.5 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.