வேங்கைவயல் விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகள் என முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.