திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று(செப்.15) நடைபெற்றது இதில் விவசாயிகள் தங்களின் பல நாள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் பாலாற்றில் கழிவுநீர் கலப்பதும் அமிலக் கழிவுகள் அகற்றப்படாததும், பாலாற்று நினைவுத்தூன் பழைய இடத்தில் நிறுவ உத்தரவிடவும், நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவவும். தேங்காய் மரத்திற்கு உரிய காப்பீடு வழங்கவும் வேண்டும் என வலியுறுத்தினர்.