முப்பெரும் சட்டதிருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
*திருப்பத்தூரில் குற்றவியல் முப்பெரும் சட்டங்களை திருத்தம் செய்ததை கண்டித்து காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பேரணியாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள். *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குற்றவியல் முப்பெரும் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சி சட்டம், இந்திய குற்றவியல் விசாரணை முறை சட்டம், ஆகியவற்றின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா, என சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும் அதனை திரும்ப பெற கோரியும்
திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மூன்றாவது நாளாக திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது காவல்துறை சார்பாக வழக்கறிஞர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழையாத வண்ணம் இரும்பு தடுப்புச் சுவர்களை அமைத்து உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். ஆனால் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி வழக்கறிஞர்கள் அனைவரும் கோஷங்கள் எழுப்பியபடி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி