சூறைக்காற்றால் வேளாண் அலுவலகத்தில் மின்கம்பம் விழுந்தது.

72பார்த்தது
வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் சூரை காற்றால் வேளாண் அலுவலக வளாகத்தில் இருந்த பூ மரம் மின் கம்பத்தின் மீது விழுந்ததால் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் விழுந்து சேதம். மின் இணைப்பு உடனடியாக துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம், நிம்மியம்பட்டு கொத்துக்கொட்டை உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் சூரை காற்றால் வேளாண் அலுவலக வளாகத்தில் இருந்த பூ மரம் மின் கம்பத்தின் மீது விழுந்தததில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்தது.

சம்பவம் குறித்து பகுதி மக்கள் மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மின்சார துறையினர் உடனடியாக மின் இணைப்பு துண்டித்து மின் இணைப்பு சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் மின்சாரம் தூண்டிக்கப்பட்டது. மின்சார துறையினர் உடனடியாக மினினைப்பு தூண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி