2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று (அக்., 03) நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில் தகவல் தொழில் நுட்ப அணியின் எதிர்காலப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம், திமுக ஐடி விங் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா சமர்ப்பித்து விவரங்களையும் எடுத்துரைத்தார். அமைச்சர் எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.