முதலமைச்சர் கோப்பை: துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

56பார்த்தது
முதலமைச்சர் கோப்பை: துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இன்று (அக் 04) முதல் அக்.24ம் தேதி வரை சென்னை உட்பட 4 நகரங்களில் நடைபெற உள்ளது. மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் சுமார் 11.56லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த முறை 11வகையான விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார். 25ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி