தவெக மாநாட்டு பந்தக்கால் நடும் விழா

57பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை இன்று (அக்., 04) அதிகாலையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் வருகிற 27ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தவெகவின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க மாநாட்டுக்கு பூமி பூஜை போடப்பட்டது.

தொடர்புடைய செய்தி