வாணியம்பாடி நகராட்சி சார்பில் 16 குரங்குகள் பிடிப்பு
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் புகார் தெரிவித்து வந்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில் வனத்துறையினர் நகராட்சிக்குட்பட்ட1வது வார்டு பகுதியில் சுற்றி திரிந்த குரங்குகளை கூண்டு வைத்து 16 குரங்குகளை பிடித்தனர்.