சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று (பிப்.,11) செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தைப்பூச விடுமுறை நாளான இன்று தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், இன்று அலுவலகம் திறந்திருக்கும். விடுமுறை நாள் என்பதால் ஆவணப்பதிவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.