பீர் பாட்டிலால் குத்தி தந்தையை கொலை செய்த மகன்

81பார்த்தது
பீர் பாட்டிலால் குத்தி தந்தையை கொலை செய்த மகன்
தர்மபுரி: மணலூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவருக்கு 80 சென்ட் நிலமும், மனைவி பெயரில் 1½ ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இவரது 2வது மகன் சின்னசாமி (30) தனக்கு பிரித்து கொடுத்த நிலத்தை கிரையம் செய்து வைக்க சொல்லி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த தினம் இரவு சின்னசாமி, அவரது நண்பர்கள் சீனிவாசன், அப்பு ஆகியோருடன் வி.மேட்டூரில் பொன்னுசாமி தங்கியுள்ள இடத்திற்கு வந்து தகராறு செய்துள்ளனர். ஆத்திரமடைந்த சின்னசாமி, தந்தை என்றும் பாராமல் பொன்னுசாமியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திக் கொன்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி