சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி!

50பார்த்தது
சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி!
வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 28). நெல்வாய் காலனி பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் சஞ்சய் ஆகியோர் இவரது நண்பர்கள். இவர்கள் அமிர்தி செல்வதற்காக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் சென்றனர். அப்போது பாலாஜி தனது வீட்டில் காசு வாங்கி வருவதாக கூறினார். இதையடுத்து 3 பேரும் கணியம்பாடி தனியார் பெட்ரோல் பங்க் அருகில் இறங்கினர். ரகு இயற்கை உபாதை கழிப்பதற்காக பெட்ரோல் பங்கின் பின்புறம் சென்றார். அப்போது அருகில் இருந்த சுவர் இடிந்து ரகுவின் மீது விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி