32அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் காளிகாம்பாள் அம்மன் சிலை

66பார்த்தது
32அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் காளிகாம்பாள் அம்மன் சிலை
பேரணாம்பட்டு தாலுகா டி. டி. மோட்டூர் ஊராட்சியில் பெரிய பள்ளம் என்ற அண்ணாநகர் அருகே மகாகாளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 32 அடி உயரத்தில் மகாகாளிகாம்பாள் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கோவில் உரிமையாளர் காளிகாம்பாள் சிவா சுவாமி கூறுகையில், காளிகாம்பாள் கோவிலில் பூஜைகள் அம்மனுக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கோவிலில் வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் நினைத்தது நடக்கும் என்றும் மனமுருகி வேண்டி வருகின்றனர்.

இங்கு செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்திற்கு 4 நாட்கள், பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தற்போது சிற்ப வேலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு காளிகாம்பாள் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி