ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உடனடியாக ரூ.2,000 கோடி தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. தற்காலிக நிவாரண பணிகளுக்கு ரூ.2,475 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.