திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். நேற்றிரவு மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் புதையுண்ட நிலையில் 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்புப் பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீட்புப்பணி குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.