சென்னை மதுரவாயிலில் தந்தை கண் முன்னே மகன் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீவா (19) என்ற இளைஞர் நீண்ட நாட்களாக கேட்டும் அவரது தந்தை முருகன் பைக் வாங்கித் தர மறுத்துள்ளார். இந்நிலையில், தந்தை வேலை செய்யும் இடத்திற்கு சென்ற ஜீவா, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி மிரட்டியபோது, எதிர்பாராத விதமாக தீ பற்றியுள்ளது. இதையடுத்து, ஜீவா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.