சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக சிறுநீரின் நிறம், அளவு மற்றும் நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்படும். கண்களுக்குக் கீழே, கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படலாம். சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற முடியாது, இது சோர்வை ஏற்படுத்தும். குமட்டல் மற்றும் வாந்தி சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளதை காட்டும் மிக முக்கிய அறிகுறியாகும், பசியின்மையும் ஏற்படலாம்.