தமிழகத்தில் இன்று முதல் வெப்பம்.. வானிலை அப்டேட்

78பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் வெப்பம்.. வானிலை அப்டேட்
தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 23ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலை இயல்பு நிலையை ஒட்டியே இருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தொடர்புடைய செய்தி