*திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 72. 500 ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. *
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி கிராமத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ். பி ராஜு தலைமையிலான போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை மாலை நேரத்தில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். 6 மணிநேரம் சோதனை நடைபெற்ற நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நேரடி புரோக்கர்கள் மூலமாக கைப்பற்றப்பட்ட 72. 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் லஞ்சம் பணியில் சிக்க கூடாது என்று எண்ணி புரோக்கர்கள் மூலம் பணத்தை பெற்றது தெரியவந்துள்ளது. பின்னர் பத்துக்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட புரோக்கர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் ஆளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.