3 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் நாற்காலி

76பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ஒருவருக்கு காதொலிகருவி, ஒருவருக்கு நவீன படிக்கும் கருவி என 5 பேருக்கு ரூ. 3. 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்.
ஆற்றை தூர்வார வேண்டும்
கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முனிசாமி தலைமையில் சங்கத்தின் அளித்துள்ள மனுவில்,
கடந்த ஆண்டு நாட்டறம்பள்ளி கல்லாறு முதல் பச்சூர் அடுத்த அரசனபள்ளி வரை சரஸ்வதி ஆறு தூர்வாரும் பணி நடைபெற்றது. சில காரணங்களால் தூர்வாறும் பணியானது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஒப்பந்ததாரரை கேட்டால் அவர் பணி நிறைவு பெற்றதாக கூறுகிறானர். எனவே இதுகுறித்து ஆய்வு செய்து தூர்வாறும் பணியை மீண்டும் தொடங்கி அரசனபள்ளி முதல் கொத்தூர் வரை சரஸ்வதி ஆற்றை தூர்வார வேண்டும் என கூறியிருந்தனர்.
வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் அளித்துள்ள மனுவில்,
எங்கள் பகுதியில் செல்லும் காரப்பள்ளம் காணாற்றில் முள் செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. இவற்றில் விலங்குகளும், கொடிய விஷமுள்ள பூச்சிகளும் காணப்படுகின்றன. மேலும் இதனால் நீர்வரத்தும் தடைபடுகிறது. எனவே காணாற்றை தூர்வாரி முள் செடிகளை அகற்றி, நீரானது தடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி