ராணிப்பேட்டையில் தீபாவளியையொட்டி தீவிர பாதுகாப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களான எஸ். கே. சி. சந்திப்பு, வாலாஜா பேருந்து நிலையம் மற்றும் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், 10 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 55 இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 53 இடங்களில் போக்குவரத்துகளை சீர் செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு 7 தனிப்படை மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் போலீஸ் எஸ் பி, 2 துணை எஸ்பிக்கள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 131 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 520 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தெரிவித்தார்.