சாதிய கொலைவெறி தாக்குதல் - திருமாவளவன் கண்டனம்

54பார்த்தது
சாதிய கொலைவெறி தாக்குதல் - திருமாவளவன் கண்டனம்
திருவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதிய வன்கொடுமைகளை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இதற்கென காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்கிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி