விதவை ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்குகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விதவையாகவோ அல்லது கணவனால் கைவிடப்பட்டவராகவோ இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு சொந்தமாக வீடோ அல்லது நிலமோ இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டியது கட்டாயம். அதேபோல், அந்த பெண்ணுக்கு மகன் அல்லது மகள் இருந்தாலும் தாராளமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.