மீன் மற்றும் இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. பொதுப் பிரிவினருக்கு ரூ.7.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள் போன்ற பிரிவினருக்கு ரூ.10.80 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்புவோர், மீன்வளத்துறை அலுவலகங்களை அணுகி மானிய உதவியை பெறலாம்.