சோளிங்கர் - பரவத்தூர் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியல்!

67பார்த்தது
சோளிங்கர் - பரவத்தூர் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியல்!
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட நாரைக்குள மேடு, கிழக்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன கால்வாயில் விடப்படுகிறது. இதனால் 16-வது வார்டு கீழாண்டை மோட்டூர் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக் கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் கழிவு நீர் இதுவரை அகற்றப்படாமல் தேங்கி நிற்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கீழாண்டை மோட்டூர் பகுதி மக்கள் சோளிங்கர் - பரவத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் மற்றும் முன்னாள் எம். பி. சி. கோபால், முன்னாள் எம். எல். ஏ. நகராட்சி உறுப்பினர் அசோகன், நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் விவசாய பயன்பாட் டுக்கு ஏரியிலிருந்து பாசன கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். பாசன கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி