வேலூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!
திமிரி காவல் நிலைய எல்லைக்குள் உள்ள நம்பரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 37). இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக திமிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு 'சீல்' வைத்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.