கேரளா: திருவனந்தபுரத்தில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று (நவ.28) கேரளா - கோவா அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோவா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் என்ற 1-0 கோல் கணக்கில் கோவா அணி வெற்றிப் பெற்றது. கோவா அணியில் போரிஸ் சிங் ஒரு கோல் அடித்தார்.