காவேரிப்பாக்கம்: குடிநீர் குழாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

65பார்த்தது
காவேரிப்பாக்கம்: குடிநீர் குழாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து அந்தப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குழாய் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் சாலை வழியாக ஆரம்ப சுகாதார நிலையம் வரை சென்று தேங்கியுள்ளது. மேலும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. தொடர்ந்து நீர் வெளியேறுவதால் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், குடிநீர் வீணா வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி